இடிதாக்கி செக்யூரிட்டி பரிதாப பலி

திண்டிவனம், அக்.  27:  திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் இடிதாக்கி தனியார் செக்யூரிட்டி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா சின்ன கோலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). சென்னையில் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊரான சின்னகோலம் பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பாதிரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. இதையடுத்து அவர் மழைக்காக சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் இடி தாக்கியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒலக்கூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED அரசு ஊழியர் கொலையில் 5 பேர் கைது...