பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர், அக்.27:திருப்பூர், அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கழகம் மருத்துவர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கனவே

இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை அரசு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த தர்ணா போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் விஜயானந்த் தலைமையில்  54 மருத்துவர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Stories:

>