×

மது விற்பனைக்கு இலக்கு கள் இயக்கம் கணடனம்

காங்கயம்,அக்.27: தமிழகத்தில் தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்வதற்கு கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் இருப்பதாவது: உலக அளவில் மதுவிலக்கு தோற்றுப்போய் இருந்தாலும்,ஒரு அரசின் இலக்கு மதுவிலக்கை நோக்கியே இருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிறுத்தி, மது விற்பனை இலக்காக ரூ.585 கோடியை நிர்ணயம் செய்துள்ளது. இது தமிழநாட்டிற்கு வந்திருக்கும் தலைகுனிவாகும்.

மேலும் உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கு  தடை விதித்து விட்டு, இறக்குமதி மதுக்களுக்கும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுகளுக்கும் சிவப்பு கம்பளம் விரித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உலகளாவிய நடைமுறைக்கும் மாறானது. 2020 ஜனவரி 21ம் தேதி முதல் கள்  இறக்கும் போராட்டம் விரிவு படுத்தப்படும். பீகாரை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை மாற்றியமைக்கபட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Target ,drive ,
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...