×

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகள்

திருப்பூர், அக்.27: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப் படுவதையொட்டி, திருப்பூரில் ரயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (27ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று சென்றனர். இதனால் புதிய, பழைய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், சென்னை, ஈரோடு, திருச்சி மதுரை தேனி மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல பழை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கோவை பொள்ளாச்சி பாலக்காடு மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.

இதேபோல் திருப்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் முன்பு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று சென்றனர். திருச்சி வழியாக சென்ற தென் மாவட்டம் மற்றும் சென்னை, கரூர், மார்க்க ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. நிற்க கூட இடம் இல்லாமல் நெரிசலோடு பயணத்தை மேற்கொண்டனர். கோவை, பாலக்காடு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களை காட்டிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், இருசக்கர வாகனம் சொந்த கார், வாடகை கார், டூரிஸ்ட் வேன் உளிட்டவைகள் மூலமாக பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் முக்கிய சாலைகளான, குமரன் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு பி.என். ரோடு உள்ளிட்ட ரோடுகளில், நேற்று அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. வளம் ரோடு குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு வாகனமும் மணி கணக்கில் ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை ஓழுங்குபடுத்துவதில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

Tags : Motorists ,areas ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...