×

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி கிராமம்

பந்தலூர், அக். 27 :  பந்தலூர் அருகே  நெல்லியாளம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட செம்மண்வயல் ஆதிவாசி கிராமத்தில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஆதிவாசி கிராமத்தில் அடிப்படை வசதிகளான முறையான வீடு, குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், ஆதிவாசி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் சாலைகள் அமைத்து தரவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் மிகுந்த சிரமப்படுகிறோம். அரசு வீடு கட்ட ஆணை கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை யாரும் வீடுகளை கட்டித் தரவில்லை மேலும்   குடிதண்ணீருக்கு கிணறு அமைத்து தரவில்லை.  இப்பகுதி மாணவர்கள் நெடுந்தூரம் நடந்து சென்று பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை உள்ளது சாலைவசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
அரசு வீடு கட்டுவதற்கு மாற்று நடவடிக்கை எடுத்து வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும் மேலும், நடைபாதை மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரவேண்டும்,’’ என்கின்றனர்.

Tags : Adivasi ,village ,
× RELATED கொடுவிலார்பட்டி கிராமத்தில் அடிப்படை...