×

விடுமுறை நாட்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டங்களை நடத்த கூடாது

ஊட்டி, அக். 27: விடுமுறை நாட்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தக் கூடாது என கிராம நிர்வாக அலுலவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில உயர்மட்ட குழு கூட்டம் கோத்தகிரியில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் சீனிவாசன் தலைமை வகி்ததார். மாநில பொது செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாநில பொது செயலாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். இதில், குன்னூர் கோட்டம் கோத்தகிரி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சங்கத்தின் மாநில செயலாளர் லதா எவ்வித முகாந்திரமும் இன்றி ஊட்டி கோட்டத்திற்கு மாறுதல் செய்ப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான உத்தரவினை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, பணி மாறுதல் ஆணையை செயல்படுத்தக் கோரி நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்ற போது கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததும், மாநில பொறுப்பாளர்களை அவமரியாதை செய்தது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கும் கலெக்டரை கண்டித்து நவம்பர் 8ம் தேதி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஊட்டி கிழக்கு நகரம் கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் மீது தவறான குற்றச்சாட்டின் பேரில் சுமத்தப்பட்ட 17(பி) குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய ஊட்டி ஆர்டிஓ.,விற்கு கோரிக்கை வைத்தது. வேறு மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் வந்து பணியாற்றும் ஊழியர்களை உடனடியாக ெசாந்த மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிராம நிர்வாகம் அலுவலர்களின் பணி வரன் முறை தகுதிகாண் பருவம் தொடர்பான ஆணைகள் உடனுக்குடன் வழங்கிடவும், விடுமுறை நாட்களில் உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதை தவிர்த்தட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் ஆய்வு கூட்டம் நடத்தி இரவு 10 மணிக்கு கூட்டத்தை முடிப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட காலநிலையை கருத்தில் கொண்டும், பெண் கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பு கருதியும், ஆய்வு கூட்டங்களை உரிய காலத்திற்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில், மாநில பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

Tags : inspection meetings ,holidays ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...