×

தரமான பசுந்தேயிலை விநியோகிக்க அறிவுறுத்தல்

மஞ்சூர், அக்.27:  தரமான பசுந்தேயிலை மட்டுமே விநியோகம் செய்யவேண்டும் என உறுப்பினர்களுக்கு தொழிற்சாலை நிர்வாக தரப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குந்தாபகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளதுடன் பசுந்தேயிலைவரத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு கடந்த சில தினங்களாக தினசரி 50ஆயிரம் முதல் 50ஆயிரம் கிலோவரை பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

தொழிற்சாலைகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘தரமான தேயிலை உற்பத்தி செய்யும் நோக்கில் தொழிற்சாலைகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் இருந்து தரமான பசுந்தேயிலையை மட்டுமே பறித்து விநியோகிக்க வேண்டும். பசுந்தேயிலையில் உள்ள செங்காம்பு, கட்டை, முடிச்சு, முற்றிய நிலையில் உள்ள இலைகளை அகற்றிய பின்னரே தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலையை விநியோகிக்க வேண்டும். இதன் மூலம் தரமான தேயிலை உற்பத்தி செய்வதோடு பசுந்தேயிலைக்கு கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்,’ என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனாவை தடுக்க 8 ஆலோசனைகள்....! உடனடியாக...