×

வெளியூர் செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டம்

ஊட்டி, அக். 27: தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளதால், ஊட்டியில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊட்டியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, அரசு அலுவலகங்களில் அதிக அளவில் பணி புரிகின்றனர். இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பயணிகள் நலன் கருதி கடந்த இரு நாட்களாக ஊட்டியில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்கள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.  
சிறப்பு பஸ்கள் இயக்கிய போதிலும் அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலபான பயணிகள் நின்றுக்கொண்டே கோவை வரை பயணம் செய்தனர். அதே போல் கோவை மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், ஊட்டியில் இருந்து கூடலூர் பகுதிக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களும் நிரம்பியே வழிந்தன. இதனால், ஊட்டி மத்திய பஸ் நிலையம் நேற்று காலை முதல் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.

Tags : Crowds ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...