×

கலை போட்டியில் வென்ற மாணவ-மாணவிகள்

கோவை,அக்.27: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சம்கரா சிக்ஷா) சார்பில் கோவை மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலை போட்டிகள் (கலா உத்சவ்) நடத்தப்பட்டது. கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கிரிஸ்ட் த கிங் பாலிடெக்னிக்கில் போட்டிகள் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர் பிரிவு நடனத்தில் ஹரிஹரன், லோகேஷ், அபிஜித், பாட்டு போட்டியில் ஸ்ரீநேஷ், மதிராஜா, ஆதித்யா நாரயணன், இசை போட்டியில் செல்வகுமார், மிதிலேஷ், தீபக், ஓவியத்தில் கைலாஷ், அம்ரித் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.  ஓவ்வொரு பிரிவிலும் 8 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த மாதம் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags : Student-students ,art competition ,
× RELATED மாணவ, மாணவிகளுக்கு வரும் 14ல் கலைப்போட்டி