×

இன்று தீபாவளி கொண்டாட்டம் மக்கள் ெவள்ளத்தில் ஜவுளி மாநகரம் ஸ்தம்பிப்பு

ஈரோடு, அக். 27: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈரோட்டில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் ஈரோடு நேற்று ஸ்தம்பித்தது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஜவுளி மாநகரமான ஈரோட்டில் கடந்த இரண்டு வாரமாக திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்கேவி., ரோடு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விசைத்தறி கூடங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டதையடுத்து நேற்று கடைவீதிகளில் ஜவுளிகள், பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளி கடைகள் நிறைந்த பகுதிகளான மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு மக்கள் அதிகளவில் வந்து ஜவுளி வாங்கி சென்றனர்.

மணிக்கூண்டு பகுதியில் ஆயிரக்கணக்கான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலால் மேட்டூர் ரோடு, பிரப்ரோடு, காந்திஜி ரோடு, ஆர்கேவி ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஈரோடு ஸ்தம்பித்தது. வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்ட போதிலும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதே போல பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags : Diwali Celebration of Textile City ,
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...