×

திமுகவினர் நிலவேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தல்

காரியாபட்டி, அக்.25:  திமுகவினர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு எம்எல்ஏ அறிவுறுத்தி உள்ளார். திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளால் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையாக இவற்றை தடுக்கும் நோக்கோடு நிலவேம்பு கசாயங்களை திமுக அமைப்புகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் ஆங்காங்கே நிலவேம்பு கசாயம் வழங்கிடவும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMC ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...