×

மாநில கராத்தே போட்டி காரியாபட்டி பள்ளி கலக்கல்

காரியாபட்டி, அக்.25:  வேர்ல்டு கோஜூ கராத்தே பள்ளி சார்பாக ஷிகான் அஜித் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவு மாநில அளவிலான கராத்தே போட்டி மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் நடந்தது. காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 6 வயது கட்டா பிரிவில் கனிஷ்கா தங்கப்பதக்கம், 8 வயது பிரிவில் ஜெயராம் தங்கப்பதக்கம், 10 வயது பிரிவில் பிரவீன் தங்கப்பதக்கம், 10 வயது மாணவியர் பிரிவில் மோனிகா வெள்ளிப் பதக்கம், 11 வயது பிரிவில்  வைசாலி வெள்ளிப்பதக்கம், 11 வயது பிரிவில் சண்முக பிரகாஷ் தங்கப்பதக்கம், 12 வயது பிரிவில் ராம்முகேஷ் தங்கப்பதக்கம், அருள் குமரன் வெள்ளிப்பதக்கம், 13 வயது பிரிவில் ராஜபாண்டி தங்கப்பதக்கம், பார்த்த சாரதி வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இவர் களை பள்ளி நிறுவனர் பிலவேந்திரன், தாளாளர் கீதா, முதல்வர் இமாகுலேட், கராத்தே பயிற்சியாளர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் உட்பட பெற்றோர்களும் பாராட்டினர்.

Tags : State Karate Competition ,
× RELATED சிவகங்கையில் நடந்த மாநில கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவன் வெற்றி