×

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வகுப்பு

தஞ்சை, அக். 25: தஞ்சை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 கட்டங்களாகவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 3 கட்டங்களாகவும் 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது. இரண்டாம் கட்ட பயிற்சி முகாமுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். பயிற்சியை பார்வையிட்டு மாநில உதவி திட்ட இயக்குனர் குப்புசாமி பேசுகையில், மாணவர்களுக்கு கற்பித்தலை மேம்படுத்தவும், புதிய கற்பித்தல் அணுகுமுறை மூலம் முதன்மை கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி தேவையான திறன்களை வளர்க்கவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளி சார்ந்த மதிப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பின் இன்றியமையாத பாடப்பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கற்றலை அடைய செய்யும் திறன்களை ஆசிரியர்களிடம் வளர்க்க வேண்டும். மாநில கல்வி தொடர்பான உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உதவியுடன் கற்றல் விளைவுகள், தேசிய அடைவு ஆய்வு போன்றவற்றை பள்ளி அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். கலை திட்டம், தனியாள் சமூகத்திற்குரிய பண்புகளை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளி சூழலை உருவாக்கவும், மாணவர்கள் கலையோடு இணைந்து கற்கவும், மாணவர்களின் சுகாதார நல்வாழ்வை பேனவும், பள்ளி கல்வியில் புது முயற்சிகள் செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் ரமேஷ், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Teaching workshop ,graduate teachers ,
× RELATED பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்