×

ஜேக் அண்டு ஜில் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம், அக். 25: தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் உத்தரவின்பேரில் கபிஸ்தலம் ஜேக் அண்டு ஜில் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும விதமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் கலைவாணன் மற்றும் சக பணியாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வகுப்பு மற்றும் செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி டிரஸ்டி மைக்கேல் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். பள்ளி தாளாளர் ஆலன்ரிச்சி நன்றி கூறினார்.

Tags : Jack and Jill School ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்