×

கும்பகோணத்தில் மறைமுக ஏலம் 120 குவிண்டால் பருத்தி விற்பனை

கும்பகோணம், அக்.25: கும்பகோணம் அருகே கொட்டையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் நடந்தது. இதில் அகராத்தூர், உமையாள்புரம், அலவந்திபுரம், சுவாமிமலை, வேப்பத்தூர், திருவிடைமருதூர், அசூர், ஆதனூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 120 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் பங்கேற்றனர். பின்னர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5,459, சராசரியாக ரூ.4,500, குறைந்தபட்ச விலையாக ரூ.3,300 நிர்ணயிக்கப்பட்டு பருத்தி கொள்முதல் செய்தனர்.

Tags : Auction ,Quintal Cotton Sale ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...