×

நெசவாளர்களுக்கு 3 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் பட்டு கைத்தறி சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 25: கும்பகோணம் அடுத்த திருபுவனம் சோழன் தொடக்க பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க 39ம் ஆண்டின் மகாசபை கூட்டம் நடந்தது. தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மேலாண் இயக்குனர் மோகன் வரவேற்றார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் எம்பி பாரதிமோகன், வட்டார நிலவள வங்கி தலைவர் அசோக்குமார், சரக உதவி இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனந்தன் வாழ்த்தினர். மேலாளர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பகுதிநேர மருத்துவமனை சங்கத்தின் மூலம் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி வசதி போதுமானதாக இல்லாததால் பகுதிநேர மருத்துவமனை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் நிதி பெறுவது. முதிர்வடைந்த உறுப்பினர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கேட்பது. சங்கத்தின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடனில் பட்டு சேலைகள் விற்பனை செய்யவும், கடன் விற்பனை தொகையை அவர்கள் பெறும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து சங்கத்தில் செலுத்த ஏதுவாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுமதி பெறவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் வைரவேல் நன்றி கூறினார்.

Tags : Weavers ,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி