×

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

ஜெயங்கொண்டம், அக்.25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் முகாம் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் டெங்குவை ஒழிக்க முதல் கட்டமாக அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு பள்ளி கல்லூரிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். நேற்று ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நிரந்தர முகாம் அமைக்கும் பணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷாசெந்தில்குமார் வழங்கி துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் செந்தில்நாதன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பாபு உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து தினசரி நிலவேம்பு குடிநீர் வழங்க நில வேம்பு குடிநீர் முகாம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Landslide camp ,bus stand ,Jayankondam ,
× RELATED முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்