×

வருசநாடு அருகே காட்டு யானைகளால் கிராம மக்கள் பீதி

வருசநாடு, அக்.25: வருசநாடு அருகே காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளிமலை, அரசரடி கிராமமக்கள் பீதியில் உள்ளனர்.வருசநாடு அருகே வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக  வருசநாடு வெள்ளிமலை மலைப்பகுதியில் கனமழை  பெய்து வருகிறது, இதனால் வனப்பகுதிக்குள் யானைகளுக்கு கொசுத்தொல்லை  அதிகமாக இருந்து வருகிறது.இதனால், அவை வனப்பகுதியை விட்டு இரவு, பகல் நேரங்களில் சாலைகளில் நடமாடுகின்றன. இதையறிந்த வனத்துறையினருக்கு கிராமமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான கிராமங்களுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் கிராமத்தினரை மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு பின்பு மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் வனத்திற்குள் செல் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு போன்ற ஆவணங்களை வனத்துறையினர் கேட்பதாக பொதுமக்கள்  தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து முருகன் கூறுகையில், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மலைப்பகுதியில் தேன் எடுக்கவும், கிழங்கு பறிக்கவும் மிகவும் எச்சரிக்கையுடன் செல்கிறோம். யானைகள் எப்போது வரும் என்று தெரியாது என்பதால் உயிரை பணயம் வைத்து தான் மலைக்கிராமமக்கள் வசித்து வருகின்றனர்.

Tags : Varusanad ,
× RELATED கிராம மக்கள் சாலை மறியல்