×

தனி நபரின் வறுமையை கண்டறிதல் சட்டப்பணிகள் ஆணையத்தின் பணி

சிவகங்கை, அக்.25: தனி நபரின் வறுமையை கண்டறிந்து அவர்களுக்கான பயன்களை கிடைக்கச்செய்வது சட்டபணிகள் ஆணையத்தின் பணி என நீதிபதி பேசினார். சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வறுமை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் டந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வறுமை ஒழிப்பு திட்டமானது வறுமையின் பல பரிமாணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். வறுமையின் உள்ளடங்கிய பிரச்சனைகளான ஆரோக்கியம்(மனநல ஆரோக்கியம்), வீடு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், மகப்பேறு பராமரிப்பு, குழந்தை இறப்பு, பெறக்கூடிய நீர், கல்வி, சுகாதாரம், மானியங்கள் மற்றும் அடிப்படை சேவைகள், சமூக விலக்கல், புறக்கணித்தல் போன்ற பல பரிமாணங்கள் உள்ளது. இவ்வகையில் பாதிக்கப்படக்கூடிய உண்மையில் நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் தனி நபர்களின் வறுமை நிலையை கண்டறிதல் சட்டப் பணிகள் ஆணையத்தின் பணிகளாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சமுதாயத்திலிருந்து பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படும் பயன்களை பெறுவது மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது ஆகும். மேலும், பொருளாதார அடிப்படையில் நலிந்த மக்கள் வறுமை ஒழிப்பு திட்டத்தைப் பெறும் வகையில் சட்ட உதவி மற்றும் ஆதரவு சேவைகளை தேசிய, மாநில, மாவட்ட மற்றும் தாலுக்கா அளவில் வலுப்படுத்த வேண்டும் என்பது போன்றவையாகும். இவ்வாறு பேசினார். முகாமில் குழந்தைகள் நல குழு உறுப்பினர் சரளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தன்னார்வ சட்டப்பணியாளர் நாகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்தனர்.

Tags : individual ,Legal Affairs Commission ,
× RELATED இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்