×

வானியல் ஆராய்ச்சி மையத்தில் பள்ளி மாணவர்கள் கள ஆய்வு

ஊட்டி,  அக்.25:ஊட்டி அருகேயுள்ள அகலார் குருகுலம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்  முத்தோரை பாலாடாவில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் களப்பணிகள்  மேற்கொண்டனர்.அங்கு களப் பணியின் போது, காஸ்மிக் ரேஸ் ஆய்வக  ஆராயச்சியாளர்கள் ரமேஷ், மஞ்சுநாத் ஆகியோர் மாணவர்களுக்கு வானியல்  தொடர்பான ஆராய்ச்சிகள், புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் அவைகள்  செயல்படும் முறைகள் குறித்து விளக்கி பேசினர். இந்த கள ஆய்வில், பள்ளியின்  நிர்வாகி வாசுகி, பள்ளி முதல்வர் கணேசமூர்த்தி, துணை முதல்வர் கணேஷ் உட்பட  ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : school students ,Astronomical Research Center ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...