ஊட்டியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

ஊட்டி, அக்.25:  மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வரும் 30ம் தேதி ஊட்டியில் நடக்கிறது என மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியிருப்பதாவது: 2019-20ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் வரும் 30ம் தேதி ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணி முதல் இரு பிரிவாக நடக்கிறது. எல்கேஜி., முதல் 5ம் வகுப்பு வரையிலான பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.500ம், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.250ம், 3ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.125ம் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ. ஆயிரமும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.500்ம், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.250ம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவுகளை ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும். பதிவினை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் சர்வீஸ் மூலம் வரும் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  ேபாட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் கேரம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

Related Stories:

>