×

பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி மையம்

பந்தலூர், அக்.25:  பந்தலூர் அருகே பிதர்காடு பஜார் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இம் மையத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் அங்கன்வாடி மையத்திற்கு அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சத்துமாவு உள்ளிட்ட பொருள்கள் பெறுவதற்கு சென்றனர்.

அப்போது அங்கன்வாடி மையம் பூட்டி இருந்ததால் கடும் அவதியடைந்து திரும்பி சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் மதிய நேரங்களில் அடிகடி பூட்டிருப்பது தொடர்கிறது. அங்கன்வாடி மைய பணியாளர் அரசு கொடுக்கும் மக்கள் கணக்கெடுப்பு போன்ற பணிகளுக்கு வெளியில் சென்றாலும் உதவியாளர் மாலை 5 மணிவரை இருக்கவேண்டும். இருவரும் அங்கன்வாடி மையத்தில் இல்லாது இருப்பது பாதிப்பு ஏற்படுத்துகிறது, என்றனர்.

Tags : Anganwadi Center ,Pooja ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...