×

தீபாவளியையொட்டி ஊட்டியில் இருந்து 111 சிறப்பு பஸ்கள்

ஊட்டி, அக். 25: தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் இருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 111 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கக்படும் என அரசு போக்கவரத்து கழகம் மேலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் ஊட்டி நோக்கி படையெடுக்க துவங்கி விடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை புதிய பஸ் நிலையத்திற்கு 66 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இது தவிர திருச்சி, மதுரை மற்றும் சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு 45 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 111 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகள் தேவைக்கேற்ப அறிவிக்கப்படாத திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கும் இடங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கவும் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் ஊட்டியில் இருந்து இயக்கப்படவுள்ளது. பண்டிகை முடிந்து வெளியூர்களுக்கு செல்ல ஏற்றவாறு வரும் 29ம் தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு வரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். ஊட்டி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மோகன் கூறியதாவது,  கோவையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் இருப்பார்கள் என்பதால், 66 சிறப்பு பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் வெளி மாவட்டம் செல்லும் பயணிகளின் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் உள்ளூர் மக்கள் தீபாவளி பண்டிகையின்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூடலூரில் இருந்து நேரடியாக கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சேலம் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டம் பொருத்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

Tags : Diwali ,Ooty ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்