×

ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

ஊட்டி, அக்.25:   நலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நடை பெறவிருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. எனவே, இக்கூட்டம் வரும் நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, கடந்த 30.09.2019ம் தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள், இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் குறித்து விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தயார் செய்து மாவட்ட கலெக்டர் அல்லது கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் நவம்பர் மாதம் 8ம் தேதிக்கு முன்னர் அனுப்பி ைவப்பதோடு, சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Tags : Pensioners ,meeting ,
× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டம்