×

பெள்ளத்திகம்பை ஆதிவாசி மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள்

மஞ்சூர், அக்.25:தீபாவளி பண்டிகையையொட்டி காவல்துறை, ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஆதிவாசி மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப் பட்டது. நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கங்களின் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெள்ளத்திகம்பை கிராமத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, ேராட்டரி சங்க துணை நிலை ஆளுனர் அனில்குமார், ஊட்டி ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீதர், குந்தா ரோட்டரி சங்க தலைவர் லட்சுமணன், செயலாளர் ஆசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேப்டன் ராமச்சந்திரன் வரவேற்றார். இதில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி எஸ்.பி. கலைச்செல்வன் பேசுகையில், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடவும், பட்டாசுகள் வெடிக்கும்போது எச்சரிக்கையிடனும், வரையறுக்கப்பட்ட நேரங்களில் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து டாக்டர் அனில்குமார் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஆடு, மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளை செலுத்தி மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள். இதில் எஸ்.ஐ. சுதாகர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேசிங்குராஜன், சுரேஷ்குமார், விவேக்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி