தீயணைப்புத்துறை ெசயல் விளக்கம்

மானாமதுரை, அக்.25: மானாமதுரையில் தீயணைப்புத்துறை சார்பில் தீபாவளிக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மானாமதுரை கன்னார்தெரு எம்ஏஎம் மெட்ரிக்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அழகேஸ்வரி தலைமை வகித்தார். மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள் பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்று விளக்கினர். பட்டாசு வெடித்து காயங்கள் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் குறித்தும் விளக்கினர்.

Related Stories:

>