×

தீபாவளி தீ விபத்துகள் குறித்த தகவலுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தொடர்பு எண்கள் வெளியீடு

திருப்பூர்,அக்.25: திருப்பூரில்  தீபாவளி சமயத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள  தீயணைப்புத்துறையின் சார்பில் தொலைபேசி எண்கள் வெளியிட்டுள்ளனர். தீபாவளி  பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தேவையான பாதுகாப்பு  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு  தீயணைப்பு மற்றும் மீட்பு  பணிகள் துறை மேற்கொண்டு வருகிறது. துறை இயக்குநர் காந்திராஜன் உத்தரவின்  பேரில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பட்டாசு வெடிப்பது குறித்து  உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டாசு  வெடிக்கும் போது தீ விபத்துகள் ஏற்பட நேரிட்டால் உடனடியாக தகவல்  தெரிவிப்பதற்கு வசதியாக மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் அலைபேசி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூர் வடக்கு - 0421  247221 மற்றும் 94450 86320, திருப்பூர் தெற்கு - 0421  2202101 மற்றும் 94450 86321, பல்லடம் - 04255 253110, தாராபுரம் - 04258  220345, உடுமலை - 04252 223039, காங்கேயம் - 04254 220310, வெள்ளக்கோவில் -  04257 261333, அவிநாசி - 04296 274101, தீ தடுப்பு குழுக்கள் -  94450 86534, 99426 97959 மற்றும் மாவட்ட அலுவலர் பி.கிருஷ்ணமூர்த்தி -  94450 86500, டி.வெங்கட்ரமணன் - 9445086347 என்ற  எண்களிலும், வழக்கமான 101 என்ற எண்ணிலும் பொதுமக்கள் அழைக்கலாம். இது  குறித்து மாவட்ட தீயணைப்புத் துறையினர் கூறும் போது, பொதுமக்கள் பட்டாசு  வெடிக்கும் போது தீ விபத்துகள் ஏற்பட்டால் எந்நேரத்திலும் அளிக்கப்பட்டுள்ள  எண்களுக்கு அழைக்கலாம். மேலும் எங்களது அறிவுரைகளையும் பொதுமக்கள் தவறாது  கடைபிடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது  முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் கொள்ள  வேண்டும், என்றனர்.

Tags : fire department ,fires ,Diwali ,
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...