×

தாராபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?

திருப்பூர், அக்.25: திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் ரோட்டில் 61 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டட வசதியுள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் ரோட்டில் 61 ஏக்கர் நிலப்பரப்பில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கடந்த 1965ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். இந்நிலையில் பல்வேறு தொழில் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

இதை தொடர்ந்து அந்த கட்டிடங்கள் அனைத்தும் உறுதி வாய்ந்தாக உள்ளது. தாராபுரம், மூலனூர், உடுமலை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், பழனி, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். மேற்கூறிய பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். உபயோகம் இல்லாமல் உள்ள ஈரோடு மாவட்ட கட்டுறவு நூற்பாலையில் ஜவுளிப்பூங்கா அமைக்கும் பட்சத்தில் கூடுதலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட கலெக்டர் கூட்டுறவு நூற்பாலையை நேரில் ஆய்வு செய்து ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : textile park ,
× RELATED வேதாரண்யத்தில் ஜவுளி பூங்காவுக்கு...