×

குழந்தையிடம் நகை திருடிய வேலைக்காரி கைது

திருப்பூர்,அக்.25: திருப்பூர்,  செரீப் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்னப்பூரணி (47). இவர்கள் குடும்பத்தோடு  அதே பகுதியில் தங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின்  பேத்தி கழுத்தில் அணிந்துருந்த 3 பவுன் தங்க சங்கிலி மாயமானது. புகாரின்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்  அன்னப்பூரணியின் வீட்டில்  வேலை செய்யும் பல்லடம் பகுதியை சேர்ந்த சிநேகலதா  (41) என்பவர் குழந்தையின் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து  சிநேகலதாவை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Tags : baby ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு