×

தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 87 பஸ்கள் இயக்கம்

திருப்பூர்,அக்.25: திருப்பூரிலிருந்து தென் மாவட்ட தொழிலாளர்களின் நலன் கருதி  தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுடைய  சொந்த கிராமங்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகதத்தின் சார்பில் 87 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். குறிப்பாக தென்மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்கின்றனர். இவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு, 35 பஸ்களும், திருச்சிக்கு, 35 பஸ்களும், தேனிக்கு, 17 பஸ்களும் இயக்கப்படுகிறது. பண்டிகைக்கு மூன்று நாட்கள் இருந்தாலும் நேற்று முதல் இயக்கப்பட்டது. சனிக்கிழமை கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், இரு நாட்களுக்கு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இருப்பினும், முன்கூட்டியே சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக நேற்றிரவு சிறப்பு பஸ் இயக்கம் துவங்கியது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், சந்தை எதிரே உள்ள காலியிடத்தில் நிறுத்தப்படுகிறது.

வெளியூரில் இருந்து வரும் இந்த பஸ்கள் அங்கேரிபாளையம், எஸ்.பி., அலுவலகம் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள காலியிடத்தை அடையும். அங்கிருந்து பிச்சம்பாளையம் பிரிவு வழியாக பூலுவப்பட்டி சென்று ரிங்ரோடு வழியாக வாவிபாளையம், கூலிபாளையம் நால்ரோடு சென்று, நல்லூர் வழியாக காங்கயம் ரோட்டில் பயணத்தை தொடரும். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தேனி, கம்பம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து இயங்கும். இவற்றின், வழித்தடத்தில் மாற்றமில்லை. மேட்டுப்பாளையம், கோவை, சத்தி பஸ்கள் அவிநாசி ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து இயங்கும். எஸ்.ஏ.பி. சிக்னலில் இருந்து இந்த பஸ்கள் இடது புறம் திரும்பி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டை அடையும். இங்கிருந்து பயணத்தை தொடரும். சேலம் செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வெளியே இருந்து புறப்படும்.

பயணிகள் காத்திருக்க மரத்தடுப்புகள் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அருகே அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு எப்போது? பஸ் ஸ்டாண்ட் தயாராகியுள்ள நிலையில், சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. பழைய பஸ் ஸ்டாண்டில் அனைத்து வகையான பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்றது. குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து செல்வோர் டிக்கெட் புக்கிங் செய்யலாம். தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி போக்குவரத்து கழக அதிகாரிகள் சிப்ட் முறையில் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : districts ,
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை