×

மக்காச்சோள பயிரை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முகாம்

புதுக்கோட்டை, அக்.25: மக்காச்சோள பயிரை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் ஒரே நேரத்தில உயிரியல் மருந்து தெளித்து கட்டுப்படுத்தும் முகாமை தெட்சிணாபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைததார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுவினை கட்டுப்படுத்திட கிராம அளவில் ஒட்டுமொத்த பரப்பில் பூச்சி மருந்து தெளித்திட அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மக்காச்சோள படைப்புழுவினை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்டத்தில் தெட்சிணாபுரம் கிராமத்தில் ஒட்டுமொத்த மக்காச்சோள சாகுபடி பரப்பில் அமெரிக்கன் படைப்புழுவினை முழுஅளவில் கட்டுப்படுத்திட மருந்து தெளித்தல் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா முன்னிலை வகித்து விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் போது உடல் கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும் எனவும், காலை மற்றும் மாலை வேளையில் தெளிக்க வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார். விவசாயிகள் ஒரு நேரத்தில் மருந்து தெளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags : Drug spraying camp ,American ,crop attack ,
× RELATED மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை