×

பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி பேரணி

பொன்னமராவதி,அக்.25: பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். பேரணி பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேங்கை ஊரணி, காந்திசிலை, அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக சிவன் கோயில் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவன் கோயில் முன் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் டெங்கு சம்பந்தப்பட்ட நோய்களை தடுப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Tags : Diwali ,rally ,Ponnamaravathi ,
× RELATED விபத்தில்லா தீபாவளி மக்கள் மகிழ்ச்சி