பொன்னமராவதி அருகே திருமக்கேனி கண்மாயில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி,அக்.25: பொன்னமராவதி அருகில் உள்ள திருமக்கேனிக்கண்மாயில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரையினை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் தொட்டியம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை ஓரம் திருமக்கேனிக்கண்மாய் உள்ளது.

இந்த கண்மாயில் வெங்காயத்தாமரை மண்டிக்கிடக்கின்றது.இதனால் கண்மாயின் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கண்மாயினை மூன்று பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கண்மாயின் பரப்பளவு சுருங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த வெங்காயத்தாரையினால் தண்ணீர் மூலம் விவசாயம் செய்யும் ஆயக்கட்டுதாரர்கள் மடைகள் மூலம் தண்ணீர் திறப்பதற்கு சிரமமப்படவேண்டிய நிலை ஏற்படும்,மேலும் இதில் பாம்புகள் அதிக அளவு தங்குவதற்கு வசதியாக இருக்கும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.எனவே இந்த கண்மாயில் மண்டிக்கிடக்கும்வெங்காயத்தாமரையினை அப்புறப்படுத்தவேண்டும், இந்த கண்மாயின் மடைகள், கழுங்கி போன்றவற்றை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>