கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி மீட்பு

கறம்பக்குடி, அக்.25: கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. விவசாயியான இவரது பசு மாடு மற்றும் கன்றுகுட்டியை இரவு நேரத்தில் வீட்டு முன் கட்டுவது வழக்கம். இந்நிலையில் மழை பெய்ததால் கன்று குட்டி அவிழ்த்து கொண்டு ஓடி அருகேயுள்ள சசிகுமார் என்பவரது கிணற்றில் விழுந்தது. பசுமாடு அலறிய சத்தம் கேட்டு சின்னையா வந்து பார்த்த போது கன்று குட்டி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேடி பார்த்தபோது அருகில் உள்ள கிணற்றில் கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் வீரர்கள் கிணற்றில் இறங்கி தவித்து கொண்டிருந்த காளை கன்று குட்டியை உயிருடன் மீட்டு சின்னையா விடம் ஒப்படைத்தனர்.

Tags : Recovery ,Karambakkudi ,
× RELATED ஆலங்குளத்தில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு