×

முதல்கட்ட லட்சார்ச்சனை துவங்கியது திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கீழடி அகழாய்வு பற்றிய கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, அக்.25: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் கீழடி அகழாய்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முகமது ரபீக், நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர் தலைவர் முரளிதரன் வரவேற்றார். சமூக அறிவியல், தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் நூருன் பேசுகையில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும், விளையாட்டு பொருட்களும் உலகின் தொன்மையான நாகரீகத்தை உணர்த்துகின்றன என்றார்.

ஆசிரியர் தெய்வசகாயம் பேசும்போது, உலகின் தொன்மையான நாகரீகம் தமிழருடையது என்பதை கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கிமு 600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட மொழியை பயன்படுத்தினர் என்றும் அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், பானைகள் நமக்கு உணர்த்துகின்றன என்றார். ஆசிரியர் அக்பர் அலி பேசுகையில், கீழடியில் வாழ்ந்த மக்கள் சுகாதாரமான முறையில் கழிவுநீர் கால்வாய்கள் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வந்தனர் என்றும், வீட்டிலுள்ள நீர்த்தொட்டிகள் அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றார். உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

Tags : phase ,Laksharchana ,Government School ,Tirupur ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...