×

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சமச்சீர் உரமேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி

நீடாமங்கலம், அக்.25: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சமச்சீர் உரமேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. திருவாரூர் மாவட்ட வேளாண்மைதுணை இயக்குனர் (மாநிலம் மற்றும் மாவட்டம்) ரவீந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், பேராசிரியர்கள் சத்தியபாமா, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொழில் நுட்ப பயிற்சி வழங்கினர். நிலைய மண்ணியியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா நெல், உளுந்து, நிலக்கட்லை, பருத்தி மற்றும் தென்னையில் எவ்வாறு சமச்சீர் உரமேலாண்மை செய்வது பற்றியும் அனைத்து வகையான பயிர்களுக்கும் இயற்கை உரம், உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து, பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள், ரசாயன உரங்கள் தேவை பற்றியும் அவைகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி வேளாண்கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்காக சமச்சீர் உரமேலாண்மை பற்றிய கருத்துக்காட்சியை வைத்திருந்தனர். உயிர் உரங்கள் எவ்வாறு பயிர்களுக்கு இடுவது, மக்கிய இயற்கை உரம் தயாரிப்பு பற்றிய செயல்விளக்கத்தை சரவணன், வனிதா ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை திட்ட உதவியாளர் (தொழில்நுட்பம்) ரேகா, திட்ட உதவியாளர் (கணினி) சகுந்தலா, பண்ணை மேலாளர் நக்கீரன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Needamangalam Agricultural Science Center ,
× RELATED சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்