×

தாழ்த்தப்பட்டவர்கள் தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெற அழைப்பு

திருவாரூர், அக்.25: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தாட்கோ திட்டத்தில் பயன்பெறலாம். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெற தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாராகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.ஒரு லட்சம் ஆகும். அதன்படி மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பொரோவ், டீசல் எரிவாயு, சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்), தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்ககான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்குமையம்,

ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம், கலெக்டர், மேலாண்மை இயக்குனர் மற்றும் தாட்கோ தலைவர் போன்றவர்களின் விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி- முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர் செலவுக் கணக்கர் நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி, ஆகியவற்றிற்கு தாட்கோ இணையதள முகவரியான http://application.tahdco.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, நாகை பைபாஸ் சாலை, அரசினர் மாணவர் விடுதி அருகில் திருவாரூர் என்ற முகவரியில் ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Victims ,Tatko Economic Development Program ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...