அதிகாரிகள் மெத்தனம் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.25: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின் வாரியத்தினை பொது துறையாக தொடர்ந்து நடத்திட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களையவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்றுமுன்தினம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுரவ தலைவர் சிவனேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஜெயபால், திட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Retired Electricity Officers Association ,
× RELATED 2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்