×

கலெக்டர் வேண்டுகோள் பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

வலங்கைமான், அக்.25: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களில் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென நன்னிலம் டிஎஸ்பி சுகுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் பத்து பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் முப்பத்தி இரண்டு பட்டாசு விற்பனை கடைகள் உள்ளது. நேற்று பட்டாசு உற்பததியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விற்பனை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நன்னிலம் டி.எஸ்.பி சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. வலங்கைமான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் முன்னிலை வகித்தார்.

பட்டாசுகள் விற்பனை செய்யும் இடங்களில் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதை அவசர காலங்களில் அனைவரும் கையாள தெரிந்திருக்க வேண்டும். வெடி கடைகளை சுற்றி மரங்களை வைத்திருக்க கூடாது. பணியாளர்களுக்கு காப்பீடு செய்திருக்க வேண்டும். மேலும் அதை உரிய காலத்தில் புதுப்பித்திருக்க வேண்டும். சல்பர் வைக்கவும், தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை வைக்க தனித்தனியாக கட்டிடம் இருக்கவேண்டும், சல்பர் வாங்கியது, பயன்படுத்தியது, பட்டாசு தயார் செய்தது, விற்பனை ஆகியவற்றை உரிய பதிவேட்டில் எழுதவேண்டும், உரிமம் பெற்ற நபரிடம் மட்டுமே சல்பர் வாங்க வேண்டும்.

பட்டாசு வாங்கி செல்பவர்கள் முழுவிபரம் முகவரியுடன் செல் எண்ணுடன் பதிவேட்டில் எழுதவேண்டும். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகாமையில் எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை வைக்க கூடாது. ஒரே நேரத்தில் பட்டாசு அல்லது சல்பர் 15 கிலோவிற்கு மேல் வைக்கக்கூடாது. வேலையாட்கள் பணியின்போது பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விளக்கிக் கூறப்பட்டது. கூட்டத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

டிஎஸ்பி உத்தரவு

நாற்று விட்டு பறித்த இளம்பயிர்கள் தற்போது சேற்று வயலில் நடப்பட்டு வருகின்றன. பயிர்களுக்கு போதிய நீர்வைத்து கட்டப்பட்ட நிலையில் காற்றிலாடும் பயிர் பசுமையுறவும், தண்டு வளர்ச்சிக்கும் அவசியம் இடு உரமிட வேண்டும்.

Tags : Collector ,firefighters ,fireworks sales centers ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...