×

குடியாத்தம் அருகேமர்ம காய்ச்சலுக்கு மூதாட்டி பலி வேலூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

குடியாத்தம், அக்.25: குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மூதாட்டி பலியானார். இதனால் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 3வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காந்தம்மாள்(65). இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 21ம் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை.

இதனால், வேலூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 22ம் தேதி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காந்தம்மாள் பரிதாபமாக இறந்தார்.மர்ம காய்ச்சலுக்கு மூதாட்டி பலியானதால் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : deaths ,Vellore district ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...