×

மழை நீர் வடிகால் இல்லாததால் கோவை மாநகர மக்கள் அவதி

கோவை, அக். 25:கோவை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவ மழை பெய்து வரும் நிலையில், மழை  நீர் வடிகால் பல பகுதிகளில் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர் என திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக் கோவை  மாநகராட்சி கமிஷனர் ஷர்வன்குமார் ஜடாவத்தை சந்தித்து நேற்று மனு  அளித்தார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ நா.கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்து வரும்  பருவ மழையால், குறிப்பாக உக்கடம் ஜி.எம் நகர் பகுதி, ரமலான் நகர், பாத்திமா  நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  மழை வெள்ளம்  வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல்  பரிதவிக்கும் அவலநிலை உள்ளது. மாநகராட்சி சார்பில் இங்கு மழை நீர் வடிகால்  முறையானபடி கட்டவில்லை.
இதே போல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர்  வடிகால் இல்லாததால் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை சரி செய்ய  வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பல முறை புகார்  அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை. அப்பகுதி பொதுமக்களுடன் வந்து மனு அளித்துள்ளேன்,’’ என்றார்.
இந்த சந்திப்பின்போது, மாவட்டப்  பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ராஜராஜேஸ்வரி, பகுதிக்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், கோவை லோகு, சேதுராமன், மார்க்கெட் எம்.மனோகரன்,  வட்டக்கழகச் செயலாளர்கள் முருகேசன், பதுருதீன், மகேஷ் குமார், முருகேசன், நடராஜன், மாடசாமி, சிவக்குமரன், சசிகுமார், மனோகரன், மேகனாதன், நியான்குமார், சுரேஷ், முருகன்,  வீரகேரளம் பாபு, சுரேஷ்நாராயணன், ரோடு விஜயன் மற்றும் கோட்டை அப்பாஸ்,  தொண்டரணி கண்ணன், டவுன் ஆனந்த், தமிழ்மறை, வர்த்தகர் அணி ரகுமான், ராமமூர்த்தி, ஜெயகுமார், சரஸ்வதி புஷ்பராஜ், சாரமேடு  இஸ்மாயில், அல்லாபிச்சை, தனபால், ராமகிருஷ்ணன், மோகன்குமார்,  கணபதி சம்பத்குமார், கரும்புக்கடை சாதிக், சித்ரகலா, வசந்தி, ஜோதிநகர்  ஆனந்த், நாகராஜ், த.பாலச்சந்திரன், சண்முகவடிவு, சதீஷ்குமார், உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore Municipality ,
× RELATED குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை...