×

. தீபாவளி பண்டிகைையயொட்டி கோவை ஆவினில் புதிய இனிப்பு, ரூ.10 தயிர் பாக்கெட் அறிமுகம்

கோவை, அக். 25: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ஆவின் நிறுவனம் சார்பில் ‘ஸ்பெஷல் காஜூ கட்ரி’ என்ற இனிப்பு வகையும், ரூ.10க்கு தயிர் பாக்கெட்டும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பாலும், திருப்பூர் ஒன்றியத்தில் 1.05 லட்சம் லிட்டர் பாலும், கோவை மாவட்ட ஒன்றியத்தின் மூலம் 1.70 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தில் நெய், வெண்ணெய், நறுமனப்பால், தயிர், பால்பேடா, பாதம் பவுடர், சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியையொட்டி தரமான பீரியம் இனிப்பு வகையான காஜூ கட்ரி என்ற இனிப்பு வகையை நேற்று அறிமுகம் செய்தது. இது 300கி ரூ.400 ஆகும். மேலும், தயிர் விலையின் காரணமாக தயிர் விற்பனை சரிவடைந்து வருவதாக நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆவின் நிறுவனம் நுகர்வோர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ரூ.10க்கு தயிர் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் நிறுவனத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் ராஜூ, ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு