×

கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.25:பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மத்திய அரசு தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து பேசி வருகிறது.இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் சார்ந்த சந்தைப்பொருட்கள் பலவற்றின் மீதான இறக்குமதி வரி, நிரந்தரமாக பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும். பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வர உள்ளதால் உள்ளூர் சந்தைகள் அழிவதற்கு இந்த  ஒப்பந்தம் வழிவகுக்கும். ஒப்பந்தம் முழுமை பெறுவதற்கு முன்பே தமிழக அரசு, மத்திய அரசை வற்புறுத்தி இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை