×

டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

ஈரோடு, அக். 25:டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந் நிலையில், பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,`அனைத்து வகை பள்ளிகளில் தினமும் டெங்கு தடுப்பு உறுதி மொழி ஏற்க வேண்டும். சனிக்கிழமை பள்ளிகள் உள்ள தண்ணீர் தொட்டிகளின் உள்ளே சுண்ணாம்பு அடித்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுகுறித்து தனியே பதிவேடு பராமரிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். காய்ச்சலால் விடுப்பு எடுக்கும் மாணவர் விபரங்களை சேகரித்து பதிவேடுகளை பராமரிப்பதோடு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை தொகுத்து அந்தந்த வட்டார வளமையத்துக்கு அனுப்ப வேண்டும். வாரந்தோறும் பள்ளி வளாகம், வகுப்பறைகள், அலுவலகம் ஆகியவற்றை முழுமையாக தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.


Tags : schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...