×

ஏரல் ஆனந்த் சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்

ஏரல், அக். 25: ஏரல்
 லெ. ஆனந்தமுதலியார் 100 ஆண்டு பட்டுபாரம்பரிய மிக்க கடை ஆனந்த் சிலக்ஸில் தீபாவளி ஜவுளிகள் வந்து குவிந்துள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு அனைத்து மில் ரகங்க ஜவுளிகள் குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு மல்டி கலர், ஜர்னா சாரீஸ், பீட் சில்க், காட்டன், டஸ்ஸர் சிலக்ஸ் சாரீஸ், நகோடா சாரீஸ், சாப்ட் சில்க் சாரீஸ்,  சீக்கோ காட்டன் சாரீஸ், நேகமம் காட்டன் சாரீஸ், பிகில் சாரீஸ் போன்ற புதிய ரக சேலைகளும், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு ரெடிமேட் சர்ட், பேண்ட் உட்பட ஆடைகள் மும்பை, டெல்லி, கல்கத்தா உட்பட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யபட்டு கடையில் அணிவகுத்து நிற்கின்றன. செல்டன் சர்டு, கிரின்சன், கிளப் சர்ட், ஓட்டோ சர்ட், ஆலன்சோலி போன் ரெடிமேட் சர்டுகள், பேன்டுகள் குவிந்துள்ளன. தீபாவளிக்கு இன்னும் இருநாட்களே உள்ள நிலையில் இக்கடைக்கு திரண்டுவரும் மக்கள், மனதிற்கு பிடித்த அனைத்து ஆடைகளையும் வாங்கிசெல்கின்றனர்.

 ஆனந்த் சிலக்ஸ் சார்பு நிறுவனமான லெ. ஆனந்தமுதலியார் தங்க  நகை மாளிகையில் தீபாவளி பண்டிகைக்காக புதிய புரட்சியை செய்துள்ளனர். இங்கு ரூ4000த்திற்கு நகை சீட்டு சேர்ந்தால் ரூ.2000த்திற்கு ஆனந்த் சில்க்ஸ் கடையில் போய் இலவசமாக ஜவுளி எடுத்து கொள்ளலாம். இதேபோல் ரூ3000 சீட்டு போட்டால் ரூ.1500க்கும், ரூ.2000 சீட்டு போட்டால் ரூ1000த்திற்கும், ரூ1000 சீட்டு போட்டால் ரூ.500க்கு என ஆனந்த் சிலக்ஸில் ஜவுளி எடுத்து கொள்ளலாம். இந்த புதிய அறிவிப்பால் நகை கடையில் சீட்டு போடுவதற்கும் மக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த அதிரடி சலுகையால் ஏரல் ஆனந்த் சில்க்ஸ் கடையில் தீபாவளி ஜவுளி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் இந்த தீபாவளி பண்டிகையை எங்களோடு சேர்ந்து கொண்டாட வாருங்கள் என ஆனந்த் சில்க்ஸ் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags : Diwali Celebration ,
× RELATED கொரோனா அச்சுறுத்தல் குறையும்...