×

குமரி மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க அக்.31ல் ஆலோசனை கூட்டம்

நாகர்கோவில், அக்.25: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துளார்கள். அவ்வாறு ஏற்படுத்தப்படும் ஜவுளிப் பூங்காவில், தொழில் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு உட்கட்டமைப்பினையும், அடிப்படை வசதியினையும் ஏற்படுத்த, அதற்காக ஏற்படும் செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி, இதில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை விதிகளுக்குட்பட்டு அதற்கான நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜவுளிப்பூங்காவானது குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்படும். இத்திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த ஏதுவாக குமரி மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் மாவட்ட கலெக்டர் தலைமையில் 31.10.2019 அன்று பிற்பகல் 4 மணிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே குமரி மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,textile park ,district ,Kumari ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...