×

கோவா அருகே சூறைக்காற்றில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த குமரி விசைப்படகு மீனவர்கள்

நாகர்கோவில், அக்.25:  விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக கோவா அருகே நடுக்கடலில் சிக்கி குமரி மாவட்ட மீனவர்கள் தத்தளித்தனர். குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ராபின்சன் என்பவருக்கு ெசாந்தமான ‘மேரி மாதா‘ என்ற படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வழியாக ‘சல்மார் சுப்பிரானு’ என்ற கப்பல் சென்றுள்ளது. அதில் இருந்த ஊழியர் சேலத்ைத சேர்ந்த சசிகுமார், குமரி மாவட்ட மீனவர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்ேபாது அவர் கூறுகையில், ‘கோவாவில் இருந்து 100 மீட்டர் ெதாலைவில் மேரி மாதா என்ற படகு சூறாவளி காற்றிலும், பேரலையிலும் சிக்கியுள்ளது. படகு முன்னோக்கி செல்லாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், தங்களால் விசைபடகை காப்பாற்ற நடவடிக்ைக எதுவும் எடுக்க முடியாத அளவிற்கு கடலில் சீதோஷண நிலை மோசமாக இருக்கிறது.படகில் இருந்தவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தெரிவித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியதால் உங்களை தொடர்பு கொண்டு பேசுகிறோம்’ என்று கூறியுள்ளார். அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், விசைபடகு நடுக்கடலில் தத்தளிப்பது மீனவர்களின் உறவினர்களை கவலையடைய செய்துள்ளது.

இந்த விசைபடகில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருக்கலாம் என்ற கருதப்படுகிறது. இந்த விசைபடகை மீட்க உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தின. இது தொடர்பான தகவல் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பிற மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் உதவியுடன் பழுதடைந்த படகை கரை சேர்க்கும் முயற்சியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அலையில் சிக்கிய மேலும் இரு படகுகள்: ராபின்சன் கரைக்கு அருகே வந்த வேளையில்  மேலும் இரு படகுகள் கடல் அலையில் சிக்கி தத்தளிக்கின்ற தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்துறையை சேர்ந்த இந்த படகுகளும் கோவா கடல் பகுதியில் ஆழ்கடலில் தத்தளிக்கும் விபரத்தை தெரிவித்து அவர்களையும் மீட்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : fishermen ,hurricane ,Goa ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...