×

பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்


காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு பால்குட விழா நடந்தது.ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரம் காமாட்சி அம்மனின் ஜென்ம நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் காமாட்சி அம்மன் பிறந்ததாக ஐதீகம். அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மற்றும்  பொதுமக்கள் இணைந்து 700க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் விழா நடத்தினர். சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று, காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், பக்தர்கள்  கொண்டு வந்த குடங்களில் இருந்த பாலால் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர்  தியாகராஜன், நிர்வாக அலுவலர் நாராயணன், ஆதீன பரம்பரை தர்மகர்த்தா சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் செய்தனர்.

Tags : Palguda ,Kamakshi Amman temple ,star ,Pooram ,
× RELATED தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி...