×

மதுராந்தகம் நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவ வேண்டும்

மதுராந்தகம், அக். 25: மதுராந்தகம் நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மதுராந்தகம் நகரில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் சாலை, கடப்பேரியில் சில தெருக்கள், மேலும் முறையாக பராமரிப்பு செய்யப்படாத குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையோரம் இருபுறமும்  உள்ள கால்வாய்களை முறையாக  பராமரிக்காததால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் மட்டுமின்றி, மக்கள் வசிக்கும் பகுதிகளில், நகராட்சி சார்பில் பிளிச்சிங் பவுடர் தூவவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.தற்போது, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலால், பல பகுதிகளில் மக்கள் சிகிச்சை எடுத்த வண்ணம் உள்ளனர். சிலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், மழை காலத்தில் மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் வேகமாக  நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடரை தூவவேண்டும். நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பிளீச்சிங்பவுடர் உள்ளிட்ட கிருமிநாசினிகளை வழங்கவேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : areas ,Madurai ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை