×

சிறை கைதி திடீர் சாவு

பெரும்புதூர், அக். 25: பெரும்புதூர் அருகே, போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி தனலட்சுமி (35). போந்தூரை அடுத்த தெரேசாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் காப்பாளராக வேலை செய்து வந்தார்.நேற்று காலை தனலட்சுமி, போந்தூரில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டார். பெரும்புதூர் ஒரகடம் சாலை வழியாக  சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால், அதிவேகமாக பைக்கில் மது போதையில் வந்த 2 வடமாநில வாலிபர்கள், தனலட்சமி மீது பயங்கரமாக மோதினர். இதில் கீழே விழுந்த தனலட்சுமி படுகாயமடைந்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், உடனடியாக  தனலட்சுமியை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி இறந்தார்.இதற்கிடையில், போதையில் பைக் ஓட்டி வந்த வடமாநில வாலிபர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து, பெரும்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.* கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 6வது வார்டில் குடிநீர், சாலை, மின்மயானம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய வலியுறுத்தி கோவிந்தராஜபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திமுக பிரமுகர்  கோகுலநாதன் தலைமையில் 35 பேர் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்துக்கு அனுமதி வாங்கவில்லை என கூறி அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக போராட்டம் நடத்தியதாக திமுக பிரமுகர் கோகுலநாதன் உட்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.* சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த கிளாம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (31). கடந்த 19ம் தேதி, சூனாம்பேடு போலீசார் அப்பகுதியில், சோதனை நடத்தினர். அப்போது சங்கர், மதுபாட்டில்களை பதுக்கி  வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.ஆனால் அவருக்கு, அன்றைய தினமே வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து சங்கரை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார். புகாரின்படி புழல்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிகின்றனர்.

* கூடுவாஞ்சேரி: திருவாரூர் அஸ்லாம்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (31). சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை ராஜேஷ், பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் நோக்கி தனது  பைக்கில் புறப்பட்டார். வண்டலூர் மேம்பாலத்தில் சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது, அவரது பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் ராமு (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 19ம் தேதி இரவு ராமு, சதுரங்கப்பட்டினத்தில் இருந்து வெங்கப்பாக்கத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சதுரங்கப்பட்டினம் புதிய பாலம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ராமு  படுகாயமடைந்தார்.அவரை, பொதுமக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர்.இதையடுத்து, ராமுவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அவரது உடல் உறுப்புகளை  7 பேருக்கு தானம் செய்தனர்.இதற்கிடையில், விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Prisoner ,
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...